கோயம்புத்தூர்:விவிகே நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், கார்களுக்கு ஸ்டிக்கர் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் தனது பழைய காரை விற்பனை செய்வதற்காக ஓஎல்எக்ஸ்-ல் விளம்பரம் செய்தார். இவரது காரை வாங்குவதற்காக இரண்டு பேர் வெங்கடேஷின் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது காரை ஓட்டி பார்க்க வேண்டும் என மர்ம நபர்கள் கேட்டனர். இதனால் அவர்களை காரில் அழைத்துச் சென்றார். கார் வீட்டில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் திடிரென வெங்கடேஷின் கழுத்து மற்றும் கையில் கத்தியால் தாக்கினார்.
இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக வெங்கடேஷ் காரில் இருந்து குதித்தார். இதையடுத்து மர்ம நபர்கள் வேகமாக காருடன் தப்பிச் சென்றனர். காரை ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவரை இடித்து விட்டு வேகமாக சென்றனர். இதில் பெண்ணுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.