தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேங்கியிருந்த மழைநீரில் கார் கவிழ்ந்து விபத்து - கேரள வியாபாரி பலி - Car accident in stagnant rain water

கோவை: பொள்ளாச்சி அருகே தேங்கியிருந்த மழை நீரில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரள வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேங்கியிருந்த மழை நீரில் கார் கவிழ்ந்து விபத்து
தேங்கியிருந்த மழை நீரில் கார் கவிழ்ந்து விபத்து

By

Published : Dec 3, 2019, 11:23 AM IST

கேரள மாநிலம் எர்ணாகுளம் முவாட்டுபுழா பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் பைனான்ஸ் மற்றும் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது மனைவியின் உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக பொள்ளாச்சி வழியாக தாராபுரம் ரோட்டில் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சுந்தர கவுண்டனூர் என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியோடு தண்ணீரில் இருந்து காரை மீட்டனர்.

தேங்கியிருந்த மழை நீரில் கார் கவிழ்ந்து விபத்து

ஆனால் காரில் சுப்பிரமணியம் உயிரிழந்து இருந்தார். பின்னர் அவரது உடலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:லாரி மீது கார் மோதி நான்கு பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details