கோவை அவிநாசி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா(54). இவர் 2013ஆம் ஆண்டு மாயமானதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சரோஜாவை தேடிவந்தனர். இந்நிலையில் அதே ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சரோஜா துண்டு துண்டாக வெட்டி சூட்கேட்சில் சடலமாக இருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் அராபத்(23) என்ற இளைஞர் அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே அவர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருந்ததால் அங்கு சென்று காவல் துறையினர் யாசரை கைது செய்தனர்.