தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்பனை: இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - Coimbatore

கோவை: தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கஞ்சா விற்பனை
Coimbatore

By

Published : Nov 26, 2020, 12:33 AM IST

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், கோவை பெரியகடை வீதி காவல்துறையினர்உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வாகன சோதனையின் போது, அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நவ்ஷத் என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த பெரியகடைவீதி காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நவ்ஷத் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்து பல இளைஞர்களை தவறான வழிக்கு செல்ல காரணமாக இருந்ததால் பெரியகடைவீதி காவல் ஆய்வாளர் விவேகானந்தன் பரிந்துரையின் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கான ஆணையை கோவை மத்திய சிறையில் உள்ள நவ்ஷத் இடம் காவல்துறையினர் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details