கோயம்புத்தூர்:ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில், கஞ்சா கடத்தி வருவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இது குறித்து இரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சபரி விரைவு வண்டியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த இரண்டு நபர்களை ரயில்வே காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின்பாக பதில் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த 38 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.