கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். அதுமட்டுமின்றி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல் வஹாப், மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசன் உட்பட 21 வேட்பாளர்கள் தெற்கு தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
பாஜக பணம் பட்டுவாடா... வேட்பாளர்கள் போராட்டம் - வானதி சீனிவாசன்
கோவை: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்ய டோக்கன் வழங்குவதாக கூறி பாஜகவிற்கு எதிராக தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இன்று காலை முதல் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி பொது மக்கள் வாக்களித்து வரும் நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய டோக்கன் வழங்குவதாக கூறி திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் வைசியாள் வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
அவருடன் இணைந்து அதே தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வஹாப்பும் கலந்துகொண்டு பாஜகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பணம் பட்டுவாடா செய்வதற்கு டோக்கன்கள் வழங்கியவர்களை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.