கோயம்புத்தூர் மாவட்டம், சித்தாப்புதூர் பகுதியில் கால் டாக்ஸி நிறுவனத்தை நடத்திவருவபவர் பாபி. இவர், நேற்று (பிப்.19) வழக்கம் போல் காரை எடுத்து சவாரிக்குச் சென்றார். இந்தநிலையில், நேற்றிரவு (பிப்.19) பாபியின் கால் டாக்ஸியில் பயணித்த பயணி ஒருவர் அவரை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு, தன்னுடைய கைப்பையைக் காரிலேயே விட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பாபி தனது காரில் தேடி பார்த்த போது சீட்டிற்குப் பின்னால் பை ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தார். தொடர்ந்து அப்பயணியை மீண்டும் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, பை குறித்தான விபரங்களை கேட்டறிந்தார். அவரும் பையின் அடையாளங்களைச் சரியாக தெரிவித்தார்.