சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைவரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் கோலமிட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே மக்கள் விடுதலை முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடும் மக்களின் மீது போடப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட திராவிட தோழாமை கட்சிகள் கலந்துகொண்டன.
இதையும் படிங்க: திருமாவளவன் கோலம் போட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு