தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் ஐ.டி ரெய்டு..! - it raide

கோவை: லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான 70 இடங்களில் நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டின்

By

Published : Apr 30, 2019, 6:28 PM IST

கோவையை சேர்ந்த மார்ட்டின் என்பவர் லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் நாடு முழுவதும் செய்து வருகிறார். இந்நிலையில் வரிஏய்ப்பு செய்து வந்த புகாரின் அடிப்படையில், மார்டினுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், அவருக்கு சொந்தமான கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும், கொல்கத்தாவில் உள்ள 18 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை டெல்லி, ஐதராபாத், கவுஹாத்தி, சிலிகுரி, காங்டாக், ராஞ்சி, லூதியானா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

லாட்டரி அதிபர் மார்டின் இல்லம்

மேலும், கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த மார்டினை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்பே முழு தகவல் வெளியாகும் எனவும் வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details