தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பேருந்தில் இயந்திரக் கோளாறால் தீ விபத்து - Coimbatore State Bus

கோவை: ஒப்பணக்கார வீதியில் அரசுப் பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் தீ பிடித்தது.

அரசு பேருந்தில்  தீ விபத்து
அரசு பேருந்தில் தீ விபத்து

By

Published : Mar 5, 2020, 5:14 PM IST

Updated : Mar 5, 2020, 11:42 PM IST

கோவை உக்கடம் முதல் துடியலூர்வரை செல்லும் அரசு பேருந்தான நான்காம் நம்பர் பேருந்து ஒப்பணக்கார வீதியில் திடீரென இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்தது. ஓட்டுனர் சாமர்த்தியமாக பேருந்தை உடனடியாக ஓரம் கட்டியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை வேகமாக அணைத்தனர். அதற்கு முன்பே பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால் பேருந்து பெரும் சேதாரத்திலிருந்து தப்பியது. கோவையில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயந்திரக் கோளாறால் அடிக்கடி சேதமடைந்து விபத்திற்குள்ளாகிவருகின்றன.

தற்போது கோடைகாலம் என்பதால் அனைத்துப் பேருந்துகளில் இருக்கும் இயந்திரக் கோளாறுகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு பேருந்தில் தீ விபத்து

இதையும் படிங்க: அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காமல் தனியார் பேருந்து மீது மோதி விபத்து

Last Updated : Mar 5, 2020, 11:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details