தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமான நிலைய கழிவறையில் துப்பாக்கித் தோட்டாக்கள்: காவல் துறை விசாரணை! - கோவை விமான நிலையம்

கோயம்புத்தூர்: விமான நிலைய கழிவறையில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள்
கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள்

By

Published : Sep 26, 2020, 6:34 AM IST

கோயம்புத்தூர் மாவட்ட சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், விமான நிலைய வளாகத்தின் உட்புறத்திலுள்ள கழிவறையில், தூய்மைப் பணியாளர் ஒருவர் சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது, கழிவறையின் ஒரு பகுதியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, பாதுகாப்புப் பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தொழில் பாதுகாப்புப் படையினர் தோட்டாக்களை ஆய்வு செய்தனர்.

அதில், 9 எம்.எம் தோட்டாக்கள் மூன்றும், எஸ்.எல்.ஆர் துப்பாக்கி தோட்டா ஒன்று, கைத்துப்பாக்கி தோட்டா ஒன்று, காலி தோட்டா கவர் ஒன்று ஆகியவை இருந்தது தெரியவந்தது. பின்னர், இச்சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலர்கள், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இச்சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்த பீளமேடு காவல் துறையினர், துப்பாக்கித் தோட்டாக்களை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நான் நல்லதுக்காக போராடும் 'ஸ்லீப்பர் செல்' - துப்பாக்கியுடன் வந்த இளைஞரால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details