கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு.கணவனை இழந்தவர். இவரது மகன் அருண் குமார் (25)ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.மகள் பிரீத்தா உள்ளிட்ட 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று(மார்ச்.6) மாலை அருண்குமார், பிரீத்தா இருவரும் வீட்டில் இல்லாததால் அவர்களை அலமேலு தேடியுள்ளார். அப்போது, வீட்டைவிட்டு செல்கிறோம் என இருவரும் எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அலமேலு பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.