கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளச்சி பாலக்காடு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.54 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கான சாலையில், பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருதால் அதற்கான மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.
இதனால், பாலக்காடு நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வேகமாகச் சென்று வருவதால் பொதுமக்கள், குழந்தைகள், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் சாலையில் வருவதற்கு அஞ்சுகின்றனர்.
bridge work - முறையான சாலையின்றி தவிக்கும் பொதுமக்கள் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மாற்றுப்பாதை அமைத்திருந்தும் முறையான சாலையின்றி பொதுமக்கள் அவதிபட்டுவருகின்றனர்.
பாலம் கட்டும் பணியால் ஊருக்குள் மருத்துவ அவசர ஊர்தி வருவதற்கு முறையான சாலையின்றி கிராமங்களைச் சுற்றிவரக்கூடிய சூழல் உள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, பாலம் கட்டும் பணியை வேகப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!