கோயம்புத்தூர்:மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வால்பாறை, சின்ன கல்லார், சக்தி எஸ்டேட், தல நார் எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதி அப்பர் நீரர், கவி அருவி, நவமலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நவமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைமட்ட பாலம் மூழ்கியது.
மின்சாரப்பணி ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால் பொதுப்பணித்துறை அலுவலர்கள் அணையை தீவிரக்கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.