கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேவுள்ள சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் புனேவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவருகிறார். இவரது மகன்கள் கோபால், ஜெகதீசன் இருவரும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உறவினர்கள் வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். பின் விழா முடிந்து இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த தர்மலிங்கம், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டும், அதிலிருந்து 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்தது.