கோயம்புத்தூர் ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் பொன்னழகன். இவர் அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில், நேற்று (பிப்.12) காலை கடையை திறக்க பொன்னழகன் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். கடைக்குள் சென்று பார்த்தபோது கள்ளாவில் இருந்த ரூ.40 ஆயிரம் காணாமல் போயிருந்தது.
சிசிடிவி:பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை! - கோயம்புத்தூர் திருட்டு செய்திகள்
கோயம்புத்தூர்: பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருடப்பட்டையடுத்து சிசிடிவி காட்சியை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
robbery
உடனடியாக கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சியை பார்த்த போது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பணத்தை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்துள்ளது.
இதுகுறித்து பொன்னழகன் மதுக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.