தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவர்கள் பாம்பு பிடித்த விவகாரம்: மதிமுக பிரமுகர் கண்டனம்! - Durai Boy, City Secretary, Dravida Munnetra Kazhagam

கோவையில் தீயணைப்பு துறை மற்றும் வனத் துறையினரின் அலட்சியத்தால் சிறுவர்கள் பாம்பு பிடித்ததை கண்டிக்கும் விதமாக மதிமுக நகர செயலாளர் துரை பாய் வீடியோ ஒன்றினை வெளியிடுள்ளார்.

கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்
கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்

By

Published : Aug 6, 2020, 12:55 PM IST

கோவை மாவட்டம் ஆழியாறு குடியிருப்பு பகுதிக்குள் கடந்த திங்கள்கிழமை (03.08.20) அன்று 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது.

அந்தப் பாம்பை பிடிக்குமாறு அப்பகுதி சிறுவர்கள் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் நாங்கள் மலைப் பாம்பை பிடிக்க மாட்டோம். நீங்களே பிடித்துக்கொண்டு வந்து எங்களிடம் தாருங்கள் என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்றேற்ற கழகத்தின் நகர செயலாளர் துரை பாய்

அதன் பின்னர் அவர்கள் தீயணைப்பு துறையினரை தொடர்பு கொண்டனர். அதற்கு அவர்கள் மலைப்பாம்பை நாங்கள் பிடிக்க மாட்டோம், அதற்கான பயிற்சியில்லை என்று தெரிவித்தனர். பின் வேறு வழியின்றி அச்சிறுவர்களே மலைப்பாம்பை பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:அலட்சியமாக பதில் சொன்ன வனத்துறை: பதிலடி கொடுத்த மக்கள்

இந்நிலையில், தீயணைப்பு துறை மற்றும் வனத் துறையினரின் இச்செயலை கண்டிக்கும் விதமாக சமூக ஆர்வாலர்கள் இருவர் ஒரு நாள் உணவருந்தாமல், கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம் தெரிவித்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மதிமுக நகர செயலாளர் துரை பாய், இந்தச் செயலை கண்டிக்கும் விதமாக வீடியோ ஒன்றினை வெளியிடுள்ளார். அந்த வீடியோவில், இது மிகவும் வன்மையாக கண்டிக்கும் விஷயம். இதுபோன்ற விஷயங்கள் அலுவலர்கள் தரப்பில் நடந்தால், போராட்டம் நடத்தப்படும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details