தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலை புறக்கணிக்கும் ஊர் மக்கள்! - covai boycott_election_

கோவை: ஒண்டிபுதூர் பகுதி ஆஞ்சநேயர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு பொதுக் கழிப்பிடம் கட்டித் தராததால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்காமல், தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

boycott_election
boycott_election

By

Published : Mar 19, 2021, 10:03 PM IST

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பொது கழிப்பிடம் கட்டித்தர வேண்டி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் போன்ற பல அலுவலரிடம் மனு அளித்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளோம்.

ஆஞ்சநேயர் காலனியில் 250 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் இங்குள்ள மக்களுக்குப் பொதுக் கழிப்பறை இல்லாததால் இளம் பெண்கள், வயதானவர்கள் உள்பட அனைவரும் திறந்தவெளியில் மலம் கழித்துவருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அங்கு பெண்களைப் பலர் காணொலி எடுத்து மிரட்டுகின்றனர்.

தேர்தலைப் புறக்கணிக்கும் ஊர் மக்கள்

நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் நிலத்தைக் கைப்பற்றி அரசு எங்களுக்குப் பொதுக் கழிப்பறை கட்டித்தர வேண்டும். இதற்கு முன்னர் தேர்தல்களில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய வேட்பாளர்கள் யாரும் நிறைவேற்றவில்லை. எனவே எங்கள் பகுதியில் வசிக்கும் பல வாக்காளர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:தேவர் சிலையை சேதப்படுத்திய விவகாரம்: அரசைக் கண்டித்து கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details