கோயம்புத்தூர்:சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
மேலும், அந்த இமெயிலில் ‘பாஜக அலுவலகம், மோடி ஒழிக..’ என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் துறையினர் நேற்று இரவு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தினர். குறிப்பாக, கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் உள்பட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலமாக போடப்பட்டுள்ளது.