கோயம்புத்தூர்: சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ராகுல், பிரணவ், சஞ்சய், ஆண்டோ, பூர்ண ஈஸ்வரன் ஆகிய 5 பேர் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தனர். இவர்கள் வாளையாறு அணையில் குளிக்கையில் ஆழமான பகுதிக்கு சென்ற சஞ்சய், ஆண்டோ, பூர்ண ஈஸ்வரன் ஆகிய 3 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதையடுத்து வாளையாறு காவல் துறையினர், 20 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.