தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று உறுதி! - coimbatore latest news

கோயம்புத்தூர்: ஆறு பேருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி
கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி

By

Published : May 22, 2021, 4:08 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கரோனா நோயாளிகளைத் தாக்கும் கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. இது, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான நோய் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கோயம்புத்தூரில் ஆறு பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த ஆறு பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று அறிகுறி உள்ளது. அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தான் ஏற்பட்டுள்ளதாக என மருத்துவர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கருப்பு பூஞ்சை தொற்று பாதித்து நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details