தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பாஜகவை குறை கூறுவதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை’ - வானதி சீனிவாசன் ஆவேசம்! - Gandhipuram

BJP Vanathi Srinivasan: பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜக அரசியல் செய்கிறது என சொல்ல திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

வானதி சீனிவாசன் பேட்டி
வானதி சீனிவாசன் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 4:32 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்:காந்திபுரம் நகர பேருந்து நிலையம் எதிரே புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டுமான பூஜை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 5 புதிய பேருந்து நிறுத்த நிழற்குடைகள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்கப்படவுள்ளது. தொகுதி மக்களின் கருத்துகள் கேட்டு அவர்களின் அவசியங்களை தொகுதி நிதியில் இருந்து நிறைவேற்றப்படும். பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. அதிகமான பெண் உறுப்பினர்கள் வரும்போது பெண்களின் பிரச்னைகள், அவர்களின் பார்வையில் இருந்து தீர்வு காணப்படும். கடந்த சில நாள்களுக்கு முன்பு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதற்காக திமுக அந்த தீர்மானத்தை நிறைவேற்றியது? எந்த வாக்கு வங்கிக்காக நிறைவேற்றியது? பாஜகவை விமர்சிக்கும் திமுகவின் உண்மையான முகம் எது? பாஜக கட்சிக்குள்ளேயே 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது. திமுக மந்திரி சபையில் பெண்களுக்கு முதல் வரிசையில் இடமில்லை. பாஜகவில் பெண்களுக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்படுகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜக அரசியல் செய்கிறது என சொல்ல திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை.

கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். கூட்டணி குறித்து தேசிய தலைமை, தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். எங்களது கருத்துகளை கட்சி மேலிடத்திற்கு கூறுவோம். அதை ஊடகங்கள் வாயிலாக சொல்வது முறையல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும். கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டணிக்குள் சலசலப்பு வந்தாலும் சரி செய்யப்படும்.

என் மண், என் மக்கள் யாத்திரை எல்லா இடத்திலும் சிறப்பாக நடக்கிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்” என தெரிவித்தார். கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. அவமதிப்பதை பாஜக ஒரு போதும் ஆதரிக்காது” என்றார்.

இதையும் படிங்க:நிறைவேறும் நீண்ட நாள் கனவு! மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வரலாற்றில் கடந்து வந்த பாதை என்ன?

ABOUT THE AUTHOR

...view details