தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாஜக தொண்டர்கள் மேற்குவங்கம் செல்ல தயாராக இருக்க வேண்டும்' - அண்ணாமலை - BJP state vice president Annamalai press meet in coimbatore

கோயம்புத்தூர்: மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், தொண்டர்கள் அங்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை  வெஸ்ட் பெங்கால் சலோ  அண்ணாமலை  மம்தா பானர்ஜி  Mamta Banerjee  BJP state vice president Annamalai  BJP state vice president Annamalai press meet in coimbatore  West Bengal Salo
BJP state vice president Annamalai

By

Published : May 6, 2021, 4:01 PM IST

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்கள், பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி நேற்று (மே. 5) கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்பனாயக்கன் பாளையம், பழையூரில் பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அண்ணாமலை, "இரு அநாகரிகமான செயல்பாடு மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது பெண் வேட்பாளர்களை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பாஜக தொண்டர்களின் வீடுகளை சூறையாடியுள்ளனர்.

பாஜக மீண்டும் வெல்லும். நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பாஜக, தற்போது 76 இடங்களில் வெற்றி பெற்று உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உங்களுக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றால் எங்களுக்கு இந்தியா முழுவதும் தொண்டர்கள் உள்ளனர்.

பாஜக ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் நடைபெறும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் 'வெஸ்ட் பெங்கால் சலோ' என்று அனைவரும் பெங்காலை நோக்கிச் செல்ல தயாராக இருக்க வேண்டும். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை வெற்றிபெறச் செய்ததற்கு நன்றி" என தெரிவித்தார்.

பாஜக ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க:அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details