கோயம்புத்தூர்:காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில்மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில்பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு அண்ணாமலை பொன்னாடை போர்த்தி பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், “பல்வேறு கட்சிகளிலிருந்தும் கட்சியைச் சாராதவர்களும் பாஜகவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மோடியின் பிறந்த நாள் அன்று கோயம்புத்தூரில் அவரது சிலபுகைப்படங்கள், கட்சிக் கொடிகளை காவல் துறையினர் அகற்றிய கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. இது கண்டிக்கத்தக்கது.
அரசியலான நீட் தேர்வு
நீட் தேர்வு தற்கொலை என்பது மிகப்பெரிய துயரச் சம்பவம், நாங்களும் துயரத்தில்தான் உள்ளோம். பிரதமர்கூட மாணவர்களிடம் கலந்துரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது அல்ல. நீட் சமூக நீதியை நிலைநாட்டும் தேர்வு
தமிழ்நாட்டில் பல்வேறு மாணவர்கள் முன்னிலை மதிப்பெண்களை வாங்கியுள்ளனர். இதனை அரசியலாக்கி கடந்த மார்ச் மாதத்தில் பரப்புரை மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் இதற்குப் பதில் அளிக்க வேண்டும்.
ஆளும் கட்சி நீட் தேர்வில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடக்கிறது. இதனை நாம் சுய பரிசோதனை செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேசிவருகிறோம். இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்.
நீட் தேர்வு சமூக நீதியை நிலைநாட்டும் டி.என்.ஏ.விலேயே இல்லை
இந்தத் தேர்தலில் வலுவான வேட்பாளர்களை நிற்கவைப்போம். பிரதமரின் பிறந்த நாள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியே நடந்தது. ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் ஏன் இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் நடத்தப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் நேர்மையாக நடத்திவருகின்றனர்.
இன்னொரு தலைவரைப் பற்றிப் பேசுவது எங்கள் டி.என்.ஏ.விலேயே கிடையாது. உண்மையான சமூக நீதி காவலர் யார் என்று மக்கள் முடிவுசெய்யட்டும். பெட்ரோல், டீசல் விலையை சரக்கு-சேவை வரிக்குள் (ஜிஎஸ்டி) கொண்டுவர மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிறைவேறிய சிலம்பத்திற்கான முன்னுரிமை - நன்றி தெரிவிக்கும் விதமாக சிலம்பப் போட்டி