தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 6, 2020, 10:32 PM IST

ETV Bharat / state

’சசிகலாவால் அரசியல் மாற்றம் நடக்கும்’ - சுப்பிரமணியன் சுவாமி

சென்னை: சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் இருக்கும் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

subramaniyasamy
subramaniyasamy

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் பல நாடுகள் இருக்கின்றன. இந்தியாவின் பெயரைக் கெடுக்க முயற்சிக்கின்றனர். சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என யாரும் சொல்லவில்லை. பொருளாதார அமைப்பு பலவீனமாகவும், மோசமான நிலையிலும் இருப்பதால், நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் இந்து மதத்திற்கு ஆதரவாக ’சோ’ விழாவில் பேசியதைப் போல பேசினால் அவருக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன். அடுத்த ஒரு வருடத்திற்கு தமிழ்நாட்டு அரசியலில் பெரிதாக எதுவும் நடக்காது.

சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்கள் சந்திப்பு

சசிகலா வெளியில் வந்தபின்தான் அரசியல் மாற்றம் நடக்கும். அவருக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது. அவருக்குப் பின்னால் ஒரு பெரிய சமுதாயம் இருக்கிறது. சசிகலா இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. அடுத்த வருடம் சசிகலா சிறையிலிருந்து வந்துவிட்டாலும், அடுத்த ஆறு ஆண்டுகள் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது” என்றார்.

இதையும் படிங்க:'மத்திய அரசு கேட்கவும் இல்லை; நாங்கள் கொடுக்கவும் இல்லை' - அமைச்சர் கே. பாண்டியராஜன்

ABOUT THE AUTHOR

...view details