கோவை: நேற்று செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமன், இரவிற்குள் மாவட்ட நிர்வாகம் கோவை மாநகர பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றவில்லை என்றால் பாஜகவினர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அகற்றுவோம் என தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று இரவு கோவை அவிநாசி சாலையில் மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டுள்ள திமுக போஸ்டர்களை பாஜகவினர் அகற்ற முடிவெடுத்து அங்கு திரண்டனர். திமுக போஸ்டர்கள் இல்லாமல் அனைத்து போஸ்டர்களையும் அகற்ற முடிவு எடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது திமுகவினரும் அங்கு கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. அங்கு காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.