குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வன்முறையைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கோவை மாவட்ட பாஜக சார்பில் கோரிக்கை பேரணி கோவையில் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், “தமிழ்நாட்டு மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதத்தில் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பரப்புரைச் செய்துவரும் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல்துறை அனுமதி தராத இடத்திலும் போராட்டம் என்ற பெயரில் அத்துமீறல் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டங்களை தடுக்க அரசும் காவல்துறையும் முன்வரவேண்டும்.