தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமபட்டணம் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவின் மக்கள் நலப்போராட்டம்! - Annamalai IPS

கோவை: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குள்பட ராமபட்டணம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்கள் நலப் போராட்டம் நடைபெற்றது.

BJP Protest
BJP Protest

By

Published : Sep 26, 2020, 3:30 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட ஆர். கோபாலபுரம் பகுதியில் ஓடுகின்ற சாக்கடை நீரை சுகாதாரத் துறை மருத்துவமனைக்கு எதிரில் சுமார் 6 அடி அகலத்திற்கு மேல் குழிவெட்டி அதில் தேக்கிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் கொசுத் தொல்லை அதிகரித்துவருவதாகவும் குழந்தைகள் பெரியவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் பயனளிக்கவில்லை என்பதால் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி வடக்கு ஒன்றியம் சார்பில் ஆர். கோபாலபுரம் ராமர் கோயிலின் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு ஒன்றியத் தலைவர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் கலந்துகொணடு ராமபட்டணம் ஊராட்சி பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் கண்டன உரை நிகழ்த்தினார்.

ABOUT THE AUTHOR

...view details