தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிளை தலைவர் வீட்டில் தேநீர் அருந்திய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா - தேநீர் அருந்திய பாஜக தேசிய தலைவர் ஜேபிநட்டா

கோவையில் கிளை தலைவர் வீட்டில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேநீர் அருந்தினார்.

தேநீர் அருந்திய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
தேநீர் அருந்திய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

By

Published : Dec 28, 2022, 8:05 AM IST

தேநீர் அருந்திய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

கோயம்புத்தூர்: காரமடை அருகே பாஜக சார்பில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (டிச. 27) மாலை நடைபெற்றது.

இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். தற்போது தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை, கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் அன்னூர் தெற்கு ஒன்றியம் நல்லி செட்டிபாளையம் அருந்ததியர் காலனியில் உள்ள பாஜக கிளை தலைவர் மூர்த்தி என்பவர் வீட்டுக்கு அவர் சென்றார். அங்கு அவருக்கு பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பை பெற்றுக்கொண்ட அவர் கிளை தலைவர் மூர்த்தி வீட்டில் தேநீர் அருந்தினார். அப்போது அந்த பகுதியில் கட்சி வளர்ச்சி குறித்து அவர் கேட்டறிந்தார். அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், சாலை மார்க்கமாக ஈஷா மையம் சென்றார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜே.பி. நட்டா

ABOUT THE AUTHOR

...view details