தமிழ்நாடு

tamil nadu

"திருமாவளவனின் சகோதரி மறைவு வேதனையளிக்கிறது" - பாஜக முருகன்

By

Published : Aug 6, 2020, 2:35 AM IST

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் சகோதரி மறைவிற்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

bjp murugan condolences
bjp murugan condolences

விசிக தலைவர் திருமாவளவன் சகோதரி பானுமதி கரோனாவிற்கு உயிரிழந்ததை அடுத்து அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருமாவளவனின் சகோதரி மறைவு வேதனையளிக்கிறது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் சகோதரி பானுமதி, கரோனா பாதிப்பால் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் சகோதரர் திருமாவளவனுக்கும்,அவரது பிள்ளைகளுக்கும்,குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் . அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details