தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை..இது ஊழல் வாதிகளுக்கு ஒரு பாடம் - வானதி சீனிவாசன் அறிக்கை - higher education minister

Vanathi Srinivasan Issued Statement: ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை இது ஊழல் வாதிகளுக்கு ஒரு பாடம் என பாஜக சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

Vanathi Srinivasan Issued Statement
ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை..இது ஊழல் வாதிகளுக்கு ஒரு பாடம் - வானதி சீனிவாசன் அறிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 10:27 PM IST

கோயம்புத்தூர்: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2006- 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக அளவுக்குச் சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டிருப்பது, நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தால் பொன்முடி விடுவிக்கப்பட்டாலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, பொது வாழ்க்கையில் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைந்துள்ளது.

இன்று தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி மீதான மற்றொரு சொத்துக் குவிப்பு வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை திடீரென வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி 2022 இல் சென்னை உயர் நீதிமன்றம், அலுவல் ரீதியான உத்தரவைப் பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார்.

இது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த வழக்கைத் தாமாக முன் வந்து விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் தான் மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். இந்த வழக்கில் பொன்முடியைக் காப்பாற்ற நடந்த அதிகார அத்துமீறல்களைக் கண்டித்துக் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றமே அதிர்ச்சி தெரிவித்தது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர்கள் மீதான ஊழல் வழக்கை, பெங்களூருவுக்கு மாற்ற திமுக தொடர்ந்த வழக்கே காரணம்.

இப்போது திமுக அரசில் அமைச்சர்களாக உள்ள பலர் மீது ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, ஏற்கனவே திமுகவே உருவாக்கிய முன் உதாரணத்தின்படி, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, திமுக கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:இந்திய ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! வீரர்கள் உயிரிழப்பு? என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details