தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளாவின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்..!

BJP MLA Vanathi Srinivasan dance: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கோவை பீளமேடு பகுதியில் மலையாள மொழி பேசும் மக்களுடன் சேர்ந்து கேரளாவின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

BJP MLA Vanathi Srinivasan dance
கேரளாவின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 5:20 PM IST

கேரளாவின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்: பீளமேடு பகுதியில் பாஜக மகளிர் அணிக் கோவை மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ வீட்டு வளாகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு மலையாள மொழி பேசும் மக்களுடன் சேர்ந்து கேரளாவின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஓணம் பண்டிகை நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கோவை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தோடு எல்லைப் பகுதி மாவட்டம் என்பதும் இல்லாமல் அதிகமான கேரள மக்கள் தொழில் துறையில், கல்வித்துறையில் மிகச் சிறப்பான முறையில் பங்களிப்பை வழங்கும் மலையாளம் மொழி பேசுகின்ற சமுதாயத்து மக்கள் இங்கு அதிகமாக இருக்கிறார்கள்.

அனைத்து மலையாள சகோதர சகோதரிகளுக்கும் திருவோண நல்வாழ்த்துக்கள். தமிழக முதல்வர் கூட ஓணம் திருநாளில் மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். ஆனால் தீபாவளிக்கும் கூட இதுபோல் முதல்வர் வாழ்த்துக் கூறினால் அனைவருக்குமான முதல்வராகவும் செயல்படுகிறார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.

ஓணம் மகாபலி சக்கரவர்த்தி உடைய கதை தீபாவளிக்கும் ஒரு புராணக்கதை இருக்கிறது. ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற தமிழக முதல்வர் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. அனைவருக்கும் இந்த தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பாரா எனப் பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

பேஷன் ஷோ மற்றும் நடன நிகழ்ச்சி குறித்த கேள்விக்குப் பதில் அளித்த வானதி சீனிவாசன், "கைத்தறி ஆடைகளைப் பிரபலப்படுத்த வேண்டும், நெசவாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஃபேஷன் ஷோ ஆறு வருடமாக நடத்தி வருகிறோம். இந்த நடன நிகழ்ச்சி ஓணம் பண்டிகையை ஒட்டி அனைத்து பெண்களும் கொண்டாடக் கூடிய நடனம்" என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திமுக கோவை மேயர் பற்றிய குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த வானதி, "மேயர் என்பவர் அரசியல் வாய்ந்த பொறுப்புடைய முதன்மையான நபராக மாநகராட்சியில் இருப்பவர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது இதுபோன்ற புகார் தெரிவிப்பது என்பது மாநில அரசு தீவிரமாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் பிரதிநிதிகளாக நிர்வாகிகள் ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பொதுமக்களை மிரட்டுவது சட்டத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்துவது சர்வ சாதாரணமாக நடக்கின்ற விஷயம் கோவை மேயர் விஷயத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. யார் யாருக்கு எதிராக ஆதாரங்களும், சாட்சியங்களும் இருக்கிறதோ அதை வைத்துத் தான் மத்திய அரசு ஏஜென்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த கட்சி, இந்த கட்சி என்று எந்த பாகுபாடும் இல்லை. அவர்கள் ஆதாரத்தின் அடிப்படையிலேயே நடக்கைகள் எடுத்து வருகிறார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதியோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷால்!

ABOUT THE AUTHOR

...view details