கோயம்புத்தூர்: பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் சிலர் அலுவலகத்திற்குள் நுழைந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
அப்போது பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டாம் என கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
எச்சரிக்கை
முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும், பிரதமரின் புகைப்படம் அகற்றப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜகவினர் எச்சரித்தனர்.
கோவை பேரூராட்சி அலுவலகத்தில் மோடி புகைப்படம் இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக இணையவாசிகள் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மாணவர்களுக்கு அறிவிப்பு - ஒரு வாரம் விடுமுறை நீட்டிப்பு?