தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வேளாண் சட்டம் குறித்து திமுக, காங்கிரஸ் பொய் பரப்புரை”- பாஜக குற்றச்சாட்டு! - bjp meeting on agriculture act

கோயம்புத்தூர்: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து திமுக, காங்கிரஸ் பொய் பரப்புரையில் ஈடுபடுவதாக பாஜக விவசாயி அணி மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜ் தெரிவித்துள்ளார்.

bjp meeting on agriculture act in pollachi palladam
bjp meeting on agriculture act in pollachi palladam

By

Published : Oct 9, 2020, 3:00 AM IST

பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள கே.கே.ஜி திருமண மண்டபத்தில் வேளான் சட்டத் திருத்த மசோதா குறித்து விவசாய சங்கத் தலைவர்கள், உழவர்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்தாய்வு விளக்க கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் விவசாயி அணி மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளான் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் முழுமையான புரிதல் இல்லாமல் போராட்டத்தை தூண்டும் வகையில் பொய் பரப்புரைகளை பரப்பிவருகின்றனர்.

இச்சட்டம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற தொலைநோக்கின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அறிவிக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்காத ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது புதிராக உள்ளது" என்று கூறினார்.

வேளான் சட்டத் திருத்த மசோதா கலந்தாய்வுக் கூட்டம்

இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் கனக சபாபதி, மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்தராச்சலம், மாநில விவசாய அணி துணைத் தலைவர் பாபா ரமேஷ், மாவட்ட விவசாயி அணித் தலைவர் செல்வக்குமார், மாவட்ட தலைவர் கே. வசந்த்ராஜன், மாநில விவசாய அணி பொது செயலாளர் விஜயராகவன், செய்தி தொடர்பாளர் கே.பி. தனபால கிருஷ்ணன், இயக்க ஒருங்கினைப்பாளர் நல்லசாமி முனைவர் ரங்கநாதன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க... வேளாண் திருத்தச் சட்டத்தால் அத்தியாவசிய பொருள்கள் விலை உயராது - நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details