தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் கத்தியுடன் நுழைந்து மிரட்டியர்: சிசிடிவியில் சிக்கி கைது! - கோயம்புத்தூரில் பாஜக பிரமுகர் மனைவியை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்

கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் வீட்டில் கத்தியுடன் நுழைந்த இளைஞர், அவரது மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். அதன் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

By

Published : Mar 4, 2020, 2:05 PM IST

கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் ராமசாமி நகர் அருகே கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மாலை இந்து முன்னணியினருக்கும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராசு (எ) வசந்தகுமார், தியனேஷ், கிரண் (எ) கியான், சண்முகசுந்தரம் ஆகிய நால்வரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மோதலில் சம்பந்தப்பட்ட பாஜக இளைஞர் அணி நிர்வாகி அசோக் , சாச்சு ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இவர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை கோவை கவுண்டம்பாளையம் முருகன் நகரில் குடியிருக்கும் அசோக் வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் வீட்டிலிருந்த கண்காணிப்புக் கேமராக்களை எடுத்து உடைத்துள்ளார்.

பின்னர், வீட்டின் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த அசோக்கின் மனைவி பிரகதி, அசோக்கின் தாயார் சரஸ்வதி ஆகியோரிடம் ‘அசோக் எங்கே? சொல்லிவை உங்களை எல்லாம் நாசம் செய்து விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.

மேலும், அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் அசோக் வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை செய்தனர்.

சிசிடிவி காட்சி

முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூச்சி (எ) தினேஷ் என்பதும், இவர் செங்கல் சூளையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. பின்னர், தினேஷை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் கத்தியைக் காட்டி பணம் பறித்த பள்ளி மாணவன் கைது!

ABOUT THE AUTHOR

...view details