கோயம்புத்தூர்: கோல்டுவின்ஸ் திருமுருகன் நகரில் சுயம்பு தம்புரான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலைச்சுற்றி மாநகராட்சி இடத்தினை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று (ஆக. 4) காலை பொக்லைன் இயந்திரங்களுடன் வந்த மாநகராட்சி அலுவலர்கள் சுற்றுச்சுவரை அகற்ற முயன்றனர். அப்போது, அங்கு திரண்ட பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்புத்தெரிவித்து அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவரை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.