திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி செய்பவர்களின் எண்ணிக்கைக்கும் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருப்பதாகவும் இல்லாத நபர்களின் பெயரை எழுதி அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாகவும் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். மேலும், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க பாஜகவினர் மனு - திருப்பூர் மாவட்டச் செய்திகள்
திருப்பூர் : தாராபுரத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
நூறுநாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு
முன்னதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நீக்கம் செய்யப்படும் என மக்களவையில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியிருந்தார். இதற்கிடயே இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் அத்திட்டன் மீது எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை... ‘வா குவாட்டர் கட்டிங்’ என்றழைத்த நிறுவனம்!