தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேல் யாத்திரைக்கு ஆதரவு: கோவையில் பெண்கள் இருசக்கர வாகன பேரணி! - bjp two wheeler rally

பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெறவுள்ள வேல் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில், இன்று கோவையில் பாஜக சார்பில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

bjp two wheeler rally to support vel yatra
வேல் யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் பெண்கள் இருசக்கர வாகன பேரணி

By

Published : Nov 3, 2020, 8:00 PM IST

கோவை: பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரையானது தொடங்கவுள்ளது. இதனை ஆதரிக்கும்வகையில் பாஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் பிரீத்தி லக்ஷ்மி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணி இன்று கோவையில் நடத்தப்பட்டது.

வேல் யாத்திரைக்கு ஆதரவாக பாஜக பெண்களின் இருசக்கர வாகன யாத்திரை

கணுவாயிலிருந்து பிரசித்திப்பெற்ற மருதமலை முருகன் கோயில்வரை இந்தப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'கடவுளை கொச்சைப்படுத்துவது தான் ஸ்டாலினின் வேலை' - பொன்.ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details