கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. ஆன்மிக அரசியல் என்ற மக்கள் விரும்பும் அரசியலை ரஜினிகாந்த் கைவிட்டது ஏமாற்றம்.
யாகவாராயினும் நா காக்க.. என திருக்குறளை உதாராணம் காட்டிய கமல் ஹாசனுக்கு, இந்த திருக்குறள் துக்கடா அரசியல்வாதி என என்னை விமர்சனம் செய்யும்போது ஏன் நியாபகம் வரவில்லை. மைக் வேலை செய்யாததால் கமல் ஹாசன் டார்ச் லைட்டை வீசியது அவருக்கு பொறுமை, பக்குவம் இல்லை என்பதைக் காட்டுகிறது.
இதிலிருந்து அவர் சிறிய ஏமாற்றத்தைக்கூட தாங்கி கொள்ள முடியாதவர் என தெரியவருகிறது. வெற்றி, தோல்வி எதை தந்தாலும், மக்களுக்கு உழைப்பதுதான் அரசியலுக்கு அடிப்படை. 66 வயதான தனக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கும் கமல் ஹாசன், இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும்.