கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சி பகுதியில் உள்ள உள்ள பொங்காளியம்மன் கோயிலுக்கு சென்ற பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை வழிபாடு முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கூட்டணி தொடர்பான முடிவை தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவிப்பார். தற்போது கூட்டணியில் அதிமுக -பாஜக இடையே எவ்வித குழப்பமும் இல்லை.
ஊழல் கட்சி எது என்பதை மக்கள் முடிவு எடுத்துக் கொள்ளட்டும். பாஜக தொண்டர்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்படுவது இல்லை. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சவால்கள் அதிகரித்து வருகிறது. 2021இல் யார் எழுச்சி பெற்ற கட்சி என்று தெரிந்துவிடும்.