பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆழியாரில் பல்லுயிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சியில் வனத்துறை சார்பில் பல்லுயிர் தினம்! - வன அலுவலர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரில் வனத்துறை சார்பில் பல்லுயிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி, மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, உதவி இயக்குநர் செல்வம், வனச்சரகர் காசிலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாவர இன மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதில், மாணவிகள் பேரணியாக சென்று பல்லூயிர்கள் தாவரங்கள், புழு இனங்கள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்து கூறினர். தொடர்ந்து, வனப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் தனியார் கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுப்பட்டனர்.