இன்று (ஏப். 25) முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரயில்வே சேவைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்ந நிலையில் கோவை ரயில் நிலையத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பகார் செல்ல குழந்தைகளுடன் காத்திருந்தனர்.
உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான உணவகங்கள் திறக்கப்படாமல் இருந்துள்ளன. எனவே ரயில் நிலையத்தில் காத்திருக்கும் மக்களுக்கு உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.