மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தவிர்த்துவிட்டு துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தி பல்வேறு வகையிலான விழிப்புணர்வுகளையும், பிரசாரத்தையும் சூழலியல் ஆர்வலர்களும், அரசும் மேற்கொண்டு வருகிறது.
பிளாஸ்டிக் விழிப்புணர்வில் கின்னஸ் சாதனை முயற்சி; மாற்றுத்திறனாளிகள் அசத்தல்! - பார்வையற்றோர் சணல் பை கின்னஸ் முயற்சி
கோவை: 65 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்ட சணல் பையை கோவையைச் சேர்ந்த பார்வை திறன் குறைந்தவர்கள், மாணவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் உதவியுடன் தயாரித்து அசத்தியுள்ளனர்.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஒன்பது பார்வை திறன் குறைந்தவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரின் உதவியோடு 65 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்ட சணல் பையை தயாரித்துள்ளனர். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு துணிப்பைகள், சணல் பைகள் ஆகியவற்றை பயன்படுத்த வலியுறுத்தி வித்தியாசமான விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்கும் விதமாக பெரிய சணல் பையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டது வரவேற்பை பெற்றுள்ளது.