கோவை பீளமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி, சந்திரன் யுவா பவுண்டேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும் 66 அடி உயரம், 33 அடி அகலம் அளவில் பிரமாண்ட சணல் பையினை உருவாக்கின. பார்வையற்ற மாற்று திறனாளிகள் 9 பேர் இந்த சணல்பையினை 5 மணி நேரத்தில் உருவாக்கினர். இவர்களுக்கு திருநங்கைகளும், சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி மாணவர்களும் உதவிகரமாக இருந்து பிரமாண்ட சணல் பையினை உருவாக்கியுள்ளனர்.
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. துணி, சணல் பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கண் தெரியாதவர்கள் மிகப்பெரிய பை தயாரிப்பது இதுவே முதல் முறை எனவும், ஒரு மாதத்தில் கின்னஸ் சாதனை பதிவு செய்யப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.