தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தொலைதூர மற்றும் முழுநேர கல்விக்கு ஒரே சான்றிதழா' - போராட்டத்தில் குதித்த முழுநேர மாணவர்கள்! - போராட்டம் நடத்திய பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள்

கோயம்புத்தூர்: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முழுநேர மாணவர்களுக்கும் தொலைதூரக் கல்வி பயின்று பட்டம் பெறும் மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முழுநேர மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்திய மாணவர்கள்
போராட்டம் நடத்திய மாணவர்கள்

By

Published : Dec 5, 2019, 7:19 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முழுநேர மாணவர்களுக்கும்; தொலைதூரக் கல்வி பயின்று பட்டம் பெறும் மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. அதைக் கண்டித்து கடந்த 2015ஆம் ஆண்டு முழுநேரம் பயிலும் மாணவர்கள், அனைவருக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

தொலைதூர முழுநேர ஆய்வு பி.ஹெச்.டி பயின்று சான்றிதழ் பெறுபவர்களுக்கு 'கேட்டகிரி - பி' என கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவ்வாறு 'கேட்டகிரி - பி' சான்றிதழ் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், தொலைதூர பி.ஹெச்.டி பயின்று சான்றிதழ் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் 'கேட்டகிரி - பி' சான்றிதழை எடுத்துவிட்டு, ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக, சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்திருந்தனர்.

போராட்டம் நடத்திய மாணவர்கள்

இதனைக் கண்டித்து, இன்று முழு நேர ஆய்வு மாணவர்கள் சுமார் 70க்கும் மேற்பட்டவர்கள், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததால், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு... 30ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!

ABOUT THE AUTHOR

...view details