கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் அன்பழகன், கொங்கு மண்டலத்தின் மணிமகுடம் பாரதியார் பல்கலைக்கழகம் எனவும், ஆயிரம் ஏக்கரில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இயங்கி வருவதாகவும் கூறினார்.
மேலும், உலகளவில் கல்வியை வழங்குவதில் மூன்று முக்கிய நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளதற்கு தமிழ்நாடும் முக்கிய காரணம் என்று அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
பின்னர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நிகழ்ச்சிக்கு முன்னதாக, பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு முன் ஓன்று கூடிய பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தி.மலை கிளி கோபுரத்தில் திரும்பப் பெறப்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்பு