கோயம்புத்தூர்:கடந்த சில தினங்களாக, தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தீவிர கண்காணிப்பு
இந்நிலையில் தமிழ்நாடு தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மேலும் ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்வது தீவிரமடைந்துள்ளது.
ஆர்டி பிசிஆர் பரிசோதனை
அந்த வகையில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து, அவர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை அங்கேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து பரிசோதனைக்கு உட்பட்ட நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தால், அவர்களை உடனடியாக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
மேலும் 24 மணி நேரமும் இப்பரிசோதனையானது, சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லையில் கலையிழந்த ஆடிப் பெருக்கு விழா