தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறை அருகே வடமாநிலத்தவர்களை தொடர்ந்து தாக்கும் கரடி: ஏன் தெரியுமா? - forest officers

வால்பாறை மாணிக்கா ஏன்.சி. பகுதியில் உள்ள காட்டில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருவதால் தொடர்ந்து அவர்களை கரடி தாக்கி வருகிறது.

வடமாநிலத்தவர்களை தொடர்ந்து தாக்கும் கரடி! நடந்தது என்ன?
வடமாநிலத்தவர்களை தொடர்ந்து தாக்கும் கரடி! நடந்தது என்ன?

By

Published : Jun 8, 2022, 10:36 PM IST

கோயம்புத்தூர்: வால்பாறை மாணிக்கா என்.சி. பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த புதுவான் ஓரான் (29) என்பவர் 36 பேருடன் காட்டில் வேலை செய்துள்ளார். அப்போது கரடி அவரின் முழங்காலை கடித்து குதறியது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வால்பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் மணிகண்டன் மருத்துவமனைக்கு சென்று புதுவான் ஓரானுக்கு ஆறுதல் கூறி 5 ஆயிரம் பணம், பழங்களை வழங்கினார்.

இது குறித்து வனச்சரகர், அப்பகுதியில் யாரும் பணி செய்ய வேண்டாம் எனக் கூறினார். சம்பவ இடத்தில் வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை மாணிக்கா ஏன்.சி. பகுதியில் உள்ள காட்டில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருவதால், தொடர்ந்து அவர்களை கரடி தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க "ஆபரேஷன் கந்துவட்டி" - டிஜிபி அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details