கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சேடல் அணை செண்ணியப்பா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது தாத்த ராசுமுத்து(75) என்பவர் கனகராஜ் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக தங்கிவருகிறார். இந்நிலையில், இன்று (டிசம்பர்-13) காலை 7 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்குச் சென்றபோது புதரில் பதுங்கியிருந்த கரடி அவரை தலைப்பகுதியில் கடித்துள்ளது.
வால்பாறை அருகே கரடி கடித்ததில் முதியவர் படுகாயம் - வால்பாறை கரடி
கோவை: வால்பாறை அருகே செண்ணியப்பா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த முதியவரை கரடி கடித்ததில் படுகாயம் அடைந்தார்.
கரடியுடன் போராடிய ராசு பலத்த காயங்களுடன் வீடு திரும்பி உள்ளார். அவருக்கு சோலையார் அணை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 35 தையல்கள் போடப்பட்டது. மேலும், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தினால் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து வனத்துறை மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் மற்றும் ஃபாரஸ்ட் ஷேக் உமர் வன தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கரடி கடித்து குதறி இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக கூண்டு வைத்து கரடியைப் பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.