தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக நன்செய் பாசனத்திற்கு, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இவர்களின் கோரிக்கைகளை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம்பெறும் நிலங்களுக்கு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.